முகமாலையில் வெடி பொருட்கள் அகற்றுவதை நேரில் சென்று பார்வையிட்ட அமெரிக்க தூதரக குழுவினர்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிப்பொருட்களை அகற்றும் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நிதி உதவியியல் டாஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் தொடர்பில் குறித்த குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளினால் பாவிக்கப்பட்ட அபாயகரமான வெடி, கண்ணி வெடிகள், கைகுண்டுகள், செல்கள் கிளைமோர் குண்டுகள் மற்றும் விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட பாரிய வெடி பொருட்கள் தொடர்பில் அமெரிக்க தூதரக குழுவினருக்கு டாஸ் நிறுவன அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.

இதேவேளை, கண்ணிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளையும் அவர்கள் நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.

You might also like