வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் சர்வதேச உளநல தினம்

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் சர்வதேச உளநல தினம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுகள் நேற்று மாலை கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, வைத்திய நிபுணர் எஸ்.சிவதாஸனின் ‘குழந்தைகளுடன்’ என்ற உளவியல் நூல் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றது.

 

அறிமுக உரையை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் நிகழ்த்தியுள்ளார்.

குறித்த நிகழ்வில், உப பீடாதிபதிகளான கே.சுவர்ணராஜா, சு. பரமானந்தம் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள், மாணவர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் மற்றும் குகதாஸன் ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை உளவல வைத்தியநிபுணர் எஸ். சிவதாசன் கலந்து கொண்டு தொழில் புரியும் இடங்களில் மனநலம் எனும் பொருளில் சிறப்புரை ஆற்றியுள்ளார்.

You might also like