வவுனியாவில் பாடசாலை மாணவர்களிடையே பொது அறிவு வினாடி வினாப் போட்டி

வவுனியாவில் உள்ள பாடசாலைகளில் முதியோர் தினத்தை முன்னிட்டு வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் பொது அறிவு வினாடி வினாப் போட்டி இன்றைய தினம்(11) ஆரம்பமானது.

முதல் சுற்றுப் போட்டிகளில் பல பாடசாலைகள் பங்குபற்றி இரண்டாம் சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகியுள்ளன.

 

இதன்போது, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி , வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி , விபுலானந்தாக்கல்லூரி, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம், பூவரசங்குளம் மகாவித்தியாலயம் ,புதுக்குளம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகள் தெரிவாகியுள்ளன.

குறித்த பாடசாலைகளுக்கான கால் இறுதிச்சுற்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளன.

இதேவேளை, முதியோர் விழுமியப்பண்புகளை உணர்த்தவும், பொது அறிவுத்தேடலை அதிகப்படுத்தவும் மாவட்ட சமூகசேவை அலுவலகம் வருடாந்தம் மாணவர்கள் மத்தியில் பொது அறிவு வினாடி வினாப் போட்டியினை நடத்தி வருகின்றது.

You might also like