வவுனியாவில் பூரண கர்த்தாலுக்கு வெகுஜன போராட்ட ஒருங்கிணைப்பு குழு பூரண ஆதரவு
வுனியாவில் இன்று (11.10.2017) மாலை 4.00 மணியளவில் இந்திரன்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று வவுனியாவில் உருவாக்கப்பட்ட வவுனியா வெகுஜன போராட்ட ஒருங்கிணைப்புகுழு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று மாலை இடம்பெற்ற பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலின்போது வவுனியா மாவட்டத்திலுள்ள சமூக மட்ட அமைப்புக்கள், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், விளையாட்டு அமைப்புக்கள் என 20ற்கும் மேற்பட்ட அமைப்புக்களின் கலந்துரையாடலின்போது வடமாகாணத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதாக அனைத்து அமைப்புக்களின் உறுப்பினர்களும் இணைந்து முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.