வழங்கப்படும் குடிநீரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: கரைச்சிப் பிரதேச செயலாளர்

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டிப் பிரதேசத்திற்கு போதியளவு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கரைச்சிப் பிரதேச சபையினுடைய செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் தட்டுவன்கொட்டிக்கிராமத்தில் குடிநீர் விநியோகம் சீராக விநியோகிக்கப்படுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கரைச்சிப் பிரதேச சபையினுடைய செயலாளர் கணேசன் கம்சநாதன் கருத்துத் தெரிவிக்கும்போது,

தட்டுவன்கொட்டிப் பிரதேசத்தில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேர் வரையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு பன்னிரண்டாயிரம் லீற்றர் அளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

குடிநீருக்கு வழங்கப்படுகின்ற நீரை இங்கிருக்கன்ற மக்கள் ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அந்தப்பகுதியில் ஏனைய தேவைகளுக்காக பொதுக்கிணறுகள் காணப்படுகின்றன.

ஆனால் பௌசர் மூலம் வழங்கப்படும் தண்ணீரையே சகல தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 9ஆம் திகதி 6,000 லீற்றர் தண்ணீரும் கடந்த 10ஆம் திகதி 8,000 லீற்றர் தண்ணீரும் குடிநீருக்காக வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த தண்ணீர் விநியோகத்தின் ஊடாக பிரதேசசபைக்கு எந்தவிதமான வருமானங்களும் இல்லை, ஆகவே இங்கு வழங்கப்படுகின்ற தண்ணீரை சரியாகப் பயன்படுத்தி கொள்ளவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

You might also like