கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தில் முக்கிய வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் பகுதியில் புனரமைக்கப்படாது இருக்கும் வீதிகளை புனரமைத்துத் தருவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் 816 குடும்பங்களைச் சேர்ந்த 2, 607 பேர் வரையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்கந்தபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீதிகள் , பிரதான வீதிகள் எவையும் இதுவரை புனரமைக்கப்படாது காணப்படுகின்றது.

இதனால், பருவமழை காலங்களில் இப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சில வீதிகள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும், முக்கியமான வீதிகளைப் புனரமைத்துத் தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like