கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சியிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று சொகுசு பேருந்தொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை கிளிநொச்சி, ஏ9 வீதி ஆனையிறவு, உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சொகுசு பேருந்தொன்று நேற்று சாரதியின் நித்திரை கலக்கத்தின் காரணமாக பாலத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியிருந்தது.

அந்த விபத்தில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. இருப்பினும், அந்த இடத்திலிருந்து சொகுசு பேருந்து அகற்றப்படாமல் இருந்துள்ளது.

இந்த நிலையில் இன்று காலை குறித்த சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். வீதி போக்குவரத்து பொலிஸாரின் அசமந்த போக்கே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like