வவுனியா பிரதேச செயலகத்திற்கு (RTI) மூலம் தகவல் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியா பிரதேச செயலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினுடாக தகவல் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் அதில் கோரப்படும் தகவல்கள் அதிகளவானவை பொது நோக்கத்திற்குரியதாக காணப்படுவதில்லை, பொது நோக்கத்திற்குரிய தகவலைக் கோரினால் அவற்றை இலகுவாக வழங்கக்கூடியதாக இருக்கும் என பிரதேச செயலாளர் கா.உதயராசா பிரதேச ஒருங்கினைப்பு கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எனது செயலகத்தில் மிகப் பெரிய இரகசிய தகவல்களுடைய தகவல்கள் எவையும் இல்லை எமது செயலகத்தில் வேலைப்பழு அதிகமாக காணப்படுகின்றது. எனவே பொதுமக்கள் பொது நோக்கத்தின் தேவைகளைக் கோரினால் அதை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

You might also like