கிளிநொச்சியில் நாளை கதவடைப்புப் போராட்டத்திற்கு த.தே.கூட்டமைப்பு அழைப்பு

நாளை முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு அனைத்து சமூகங்களையும் ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளை கேட்டுள்ளது.

அனுராதபுரம் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று அவர்களின் வழக்குகளை அனுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கு மாற்றுமாறும், பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரி தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு அளித்து நாளை முழுமையான கதவடைப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண கதவடைப்பிற்கு சகல தரப்பினரையும் இதற்கு ஆதரவு தெரிவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

You might also like