வவுனியா பிரதேச ஒருங்கினைப்புக் குழு கூட்டத்தினை அரச திணைக்கள அதிகாரிகள் புறக்கணிப்பு

வவுனியா பிரதேச செயலக ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம் இன்று (12.10.2017) காலை 10.00 மணி தொடக்கம் வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா உதயராசா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது.

இக் கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதார் மஸ்தான் உட்பட பிரதி பொலிஸ்மா அதிபர் , பொலிஸ் பொறுப்பதிகாரிகள் , வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் , விவசாய திணைக்கள பணிப்பாளர் , கல்வியற்கல்லூரி அதிகாரிகள் , வனவிலங்கு பரிபாலசபை பொறுப்பதிகாரி , வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள் , தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் , மதுவரித் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல அதிகாரிகள் பங்குபற்றாமையினால் கூட்டத்தில் பல கதிரைகள் அதிகாரிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உரிய தீர்மானங்களை எடுப்பதற்கு உயர் அதிகாரிகள் இன்மையினால் மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like