வவுனியாவில் நாளை அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி  நாளைய தினம் (13.10.2017) நண்பகல் 1.30 மணிக்கு குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், தமிழ் விருட்சம், கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலை வேண்டியும், அவர்களின் நல் வாழ்வுக்காகவும், அனைத்து உயிர்களின் சேமத்திற்காகவும் இடம்பெறவுள்ள இறை பிரார்த்தனையில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாளையதினம் அரசியல் கைதிகளின் விடுதலையினை வழியுறுத்தி வடக்கு மாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like