வவுனியாவில் பூரண கர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் ஆதரவு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியறுத்தி வட மாகாணத்தில் நாளைய தினம் (13.10.2017) இடம்பெறவுள்ள பூரண கர்த்தாலுக்கு வவுனியா வர்த்தகர் சங்கம் தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வர்த்தகர் சங்கத் தலைவர் திரு. ரி. கே. இராஜலிங்கம் தெரிவித்தார்.

நாளை வட மாகாணத்தில் இடம்பெறவுள்ள பூரண கர்த்தால் தொடர்பான கலந்துரையாடல் இன்று (12.10.2017) காலை 11.30மணியளவில் வவுனியா வர்த்தக சங்க அலுவலகத்தில் வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு நாளைய தினம் தாங்கள் இவ் கடையடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாளைய தினம் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக வவுனியா வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.

 

 

 

You might also like