வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பயணிகளிடம் பொலிஸார் சோதனை நடவடிக்கை

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் பயணிகளிடம் சிவில் உடையில் உள்ள பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதினால் பயணிகள் பாரிய அசோகரியங்களுக்குள்ளாகின்றனர்.

இன்று (13.10.2017) சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வடமாகாணம் முழுவதும் பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் இந் நிலையில் பேரூந்துக்காக காத்திருக்கும் பணிகளை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் பயணப்பொதிகளை சோதனை செய்து வருவதுடன் அவர்களின் விபரங்களையும் பொலிஸார் திரட்டி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மத்திய பேருந்து நிலையத்தில் பெருமளவு சிவில் உடை தரித்த பொலிஸார் பொதுமக்களிடம் இவ்வாறான சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த பொலிஸாரிடம் வினாவிய போது,

வடக்கு மாகாணத்தில் கஞ்சா வியாபாரம் அதிகமடைந்து காணப்படுவதாலும் வவுனியாயுடாகவே கஞ்சாவினை கடத்தி செல்வதாலும் சந்தேகத்திடமான நபர்களிடம் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

You might also like