வவுனியாவில் அரசியல் கைதிகள் விடுதலை வேண்டி விசேட பூசை வழிபாடுகள்

அரசியல் கைதிகள் விடுதலையை வழியுறுத்தி  இன்று (13.10.2017) நண்பகல் 1.30 மணிக்கு குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்தில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், தமிழ் விருட்சம், கருமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் கைதிகளின் விடுதலை வேண்டியும், அவர்களின் நல் வாழ்வுக்காகவும், அனைத்து உயிர்களின் சேமத்திற்காகவும்  இடம்பெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர் ம. தியாகராசா, வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்களின் இணைப்பாளர் பாலச்சந்திரன் சிந்துஜன், மாவட்ட அந்தனர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் , செயலாளர் மாணிக்கம் ஜெகன் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like