முற்றாக முடங்கிய கிளிநொச்சி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் போராட்டத்தினால் கிளிநொச்சி நகரம் முற்றாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணத்தில் முழுமையான கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி நகரில் சகல வர்த்தக நிலையங்கள் பொதுச்சந்தை என்பன முழுமையாக முடங்கிப்போனதுடன், போக்குவரத்துக்களும் முற்றாக முடங்கியுள்ளன.

குறிப்பாக பாடசாலைகள், அனைத்தும் செயலிழந்துள்ளதுடன் ஒரு சில மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சென்று திரும்பியுள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்புக்கள் தங்களது முழுமையான ஆதரவுகளை வழங்கியுள்ளனர்.

You might also like