​வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டையில் வாள்வெட்டுச் சம்பவம் : மூவர் வைத்தியசாலையில்

வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் இன்று (13.10.2017) மாலை 3.00மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் அபிராபி விலாஸ் உணவகத்திற்கு முன்பாக இன்று மதியம் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த  இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் வாள்வெட்டில் காயமடைந்த மயுரன் (வயது-29) , நிதர்சன் (வயது-22) , சங்கீதன் (வயது-38) என்பவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காட்டுக்கத்தி , முள்ளுக்கம்பி , கத்திகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சம்பவ இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் இரு கிராம இளைஞர்களுக்கிடையே பல தடவைகள் மோதல் சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like