வவுனியாவில் நண்பர்களுக்கு என பொருட்கள் கொண்டு வந்த இளைஞன் பொலிஸாரால் கைது

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (13.10.2017) மதியம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞனிடமிருந்து வெளிநாட்டு சிகரேட் பையினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் கட்டார் சென்ற குறித்த இளைஞன் (வயது-24) சுகயினம் காரணமாக நேற்றையதினம் இலங்கைக்கு மீண்டும் வந்துள்ளர். 

இன்று காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் கோண்டாவில் நோக்கி பயணிக்கவிருந்த சமயத்தில் வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கஞ்சா வைத்திருப்பதாக சந்தேகத்தில் குறித்த இளைஞனின் பயணப்பொதியினை சோதனையிட்ட சமயத்தில் வெளிநாட்டு சிகரேட் 10 பேட்டி (200 சிகரேட்) யினை கைப்பற்றியுள்ளனர். 

அதனையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கைப்பற்றப்பட்ட சிகரேட்டை எதிர்வரும் திங்கட்கிழமை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக வவுனியா போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைக்கு வெளிநாட்டு சிகரேட் கொண்டுவருவது தடையேன தனக்கு தெரியாது எனவும், வியாபார நோக்கத்திற்காக இதனை கொண்டுவரவில்லை நண்பர்களுக்கு வழங்கவே கொண்டு வந்தேன் என பொலிஸாருக்கு குறித்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like