கிளிநொச்சியில் ஜனாதிபதி வருகைக்காக பொலிஸார் குவிப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் கலந்து கொள்ளும் நிகழ்விற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம்(14) கிளிநொச்சியில் இரு வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதனால், பாதுகாப்பிற்காக அதிகளவான பொலிஸார் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நகர் உட்பட பல பகுதிகளிலும் விசேட அதிரடிப் படையினர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களைப் போன்று அல்லாது இராணுவத்தினரின் பிரசன்னம் குறைவாகவே காணப்படுவதுடன், அதிகளவில் பொலிஸாரே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.