கிளிநொச்சியில் பொருளாதார மத்திய நிலையத்தை திறக்கும் ஜனாதிபதி!

யாழ். இந்துக்கல்லூரிக்கான தனது விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது கிளிநொச்சியை அடைந்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவதற்காக ஜனாதிபதி கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்குளத்தில் கடந்த அரசினால் 111 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரின் விசேட விஜயத்தினை முன்னிட்டு கிளிநொச்சி நகரமெங்கும் பாதுகாப்பு கடமைகளில் பெருமளவிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like