கிளிநொச்சி ஜனாதிபதியின் வருகையில் நல்ல செய்தி கிடைக்கும்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!
ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையின் போது நல்ல செய்தி கிடைக்குமென காத்திருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், இன்று (சனிக்கிழமை) 237ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் ஜனாதிபதியின் கிளிநொச்சி வருகையின்போது ஏதேனும் தகவல்கள் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் காத்திருக்கின்றனர்.
இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி தம்மைச் சந்தித்து, தமது போராட்டத்திற்கான நியாயமான தீர்வு தருவார் என தாம் எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.