கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்தார் ஜனாதிபதி !

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்துள்ளார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் தமது பிள்ளைகளின் நிலை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக 237ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி தம்மைச் சந்தித்து, தமது போராட்டத்திற்கான நியாயமான தீர்வு தருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஜனாதிபதி ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like