வவுனியாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வவுனியா தரணிக்குளத்தில் பல்வகைப்பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் பெற்றோரில் ஒருவரை இழந்த குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத்தெரிவு செய்து அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14.10.2017) வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் வெளிச்சம் நிறுவனத்தின் செயலாளர் தி.கார்த்திக் கிராமஅபிவிருத்திச்சங்கத்தலைவர் திரு ராகுல் ,வடமாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் திரு பா. சிந்துஜன், தமிழ் தேசிய இளைஞர் கழக உறுப்பினர் திரு.வ.பிரதீபன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பெற்றோர் பிள்ளைகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் தனது உரையில் ‘ கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற வாசகத்திற்கு இணங்க கல்வி அனைத்து குடும்ப வறுமைகளுக்கும் திர்வாக அமையும் .

இதனால் கிராமப்புறப் பிள்ளைகள் கல்வி மூலம் தம்மை வளர்த்து கஸ்டங்களைப் போக்கவேண்டும் . இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்த இந்த நிறுவனம் கல்விக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது பாராட்டத்தக்கது ‘எனக்குறிப்பிட்டார் .

You might also like