வவுனியா நெடுங்கேனியில் பாடசாலை மாணவி வீடு புகுந்து கடத்த முயற்சி : தந்தையால் முறியடிப்பு

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் கிராமத்தில் பத்து வயது சிறுமியை நேற்று முன்தினம் (12.10.2017) கடத்தி செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுங்கேனி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒலுமடு வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் பத்து வயது சிறுமியை நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்து மர்ம நபரொருவர் சிறுமியை கடத்திச் செல்ல முயற்சித்த வேளை சிறுமியின் சத்தம் கேட்ட தந்தை எழும்பிய போது குறித்த நபர் சிறுமியை கிழே போட்டு விட்டு தம்பிச் சென்றுள்ளார்.

இச் சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை நெடுங்கேனி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13.10.2017) பொலிஸார் வீட்டிற்கு சென்று சந்தேக நபர் தொடர்பான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதன் போது சந்தேகநபரின் என சந்தேகப்படும் செருப்பினை பொலிஸார் கைப்பற்றி விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன் 60வயதுடைய நபர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் அவருக்கு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் பினை மறுக்கப்பட்டு வருவதுடன் குறித்த குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.

You might also like