உங்கள் அனைவரையும் கொழும்பிற்கு அழைத்துச் செல்வேன்: கிளிநொச்சியில் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் நியாயமான தீர்வினை தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியை பிரத்தியேகமாக சந்திக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ள நிலையில், அந்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சந்திப்பிற்காக கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கு வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், சந்திப்பதற்கான திகதியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக் கொண்ட போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

You might also like