முல்லைத்தீவில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் கைது

முல்லைத்தீவில் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை, பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு வடக்கு பகுதி கடை ஒன்றில் பொருட்களை வாங்க சென்ற சிறுமியை குறித்த நபர் பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து பொலிஸாரிடம் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரை முல்லைத்தீவு பொலிஸார் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

You might also like