வவுனியா பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் முதியோர் தினவிழா

பூந்தோட்டம் முதியோர் சங்கத்தின் முதியோர் தினவிழா சங்கத்தலைவர் திரு வி.மாசிலாமணி அவர்களின் தலைமையில் இன்று (14.10.2017) மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், விருந்தினர்களாக சட்டத்தரணி ரி.கெங்காதரன் , தமிழருவி த.சிவகுமாரன் கலாச்சார உத்தியோகத்தர் பண்டிதர் வீ.பிரதீபன் , கிராம அலுவலகர் திரு. ந.குபேந்திரன் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி எஸ்.பகிர்தினி , மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .

75 வயது கூடிய ஆறு முதியவர்கள் முதியவர்களுக்கு முன்னாள் முதியோர் சங்கத்தலைவர் திரு க.வேலாயுதபிள்ளை அவர்களுக்கு தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் நெறிப்படுத்தலில் சிறப்பு பாராட்டு வழங்கப்பட்டது .

கலந்து கொண்ட முதியோர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.

You might also like