இந்துத் தமிழர்களே! இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் : வவுனியாவில் சுவரோட்டிகள்

தீபாவழியை நமது இந்துத் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டாடுங்கள் பிறமதக்கடைகளில் பண்டிகைப் பொருட்கள் வாங்குவதைத் தவிருங்கள் இந்துத் தமிழ் வர்த்தகர்களே உசாராகுங்கள் என சிவசேனா அமைப்பினரால் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இவ் சுவரோட்டிகள் இன்று (15.10.2017) அதிகாலை வேலையில் ஒட்டப்பட்டுள்ளன. வவுனியா நகரம் , புகையிரத நிலைய வீதி , சுற்றுவட்ட வீதி , பஜார் வீதி போன்ற பகுதிகளை இச் சுவரோட்டிகளை காணக்கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like