வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் வாகன விபத்து : இருவர் வைத்தியசாலையில்

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (15.10.2017) அதிகாலை 3.30மணியளவில் வீதியினை விட்டு விலகி பாலத்தினுள் வீழ்த்து பட்டா ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஈரட்டைபெரியகுளம் பகுதியில் வீதியினை விட்டு விலகி மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் துக்கமின்மை காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like