வறட்சி நிவாரணங்களை பெற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கும் முல்லைதீவு மக்கள்

முல்லைதீவு மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரணம் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மாவட்டச் செயலகத்தின் ஊடாக வறட்சி நிவாரண அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களை கிராம சேவையாளர்கள் பொது வேலைகளில் அமர்த்தியிருந்தனர்.

எனினும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணங்கள் கிடைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like