வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்று கூடல்

வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல் இன்று 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அறநெறி மாணவர்களின் பஞ்ச புராண இசைத்தலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது விசேட விருந்தினராக கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் இணைப்பாளருமாகிய திரு.பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இங்கு சேவை அடிப்படையில் கற்பித்து வரும் ஆசிரியருக்கும் இதன்போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் விசேட விருந்தினராக வருகைதந்திருந்த  திரு.பா.சிந்துஜன் அவர்களும் தன் சார்பில் தனிப்பட்ட கொடுப்பனவொன்றினையும் வழங்கி வைத்தார்.

தொடந்து கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.செல்வம் மற்றும் அறநெறி ஆசிரியரால் அவர்களினால் அறநெறி கல்வி பற்றியும் சைவசமய சிறப்பு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இதன்போது உரையாற்றிய சிந்துஜன் இவ்வாறான அறநெறிப் பாடசாலைகள் சமூகத்தின் தற்போதைய நிலையில் காலத்தின் தேவை எனக்குறிப்பிட்டதுடன் பல்வேறு சமய மற்றும் சமூக விடயங்களை பகிர்ந்தார்.

அத்துடன் இங்கு சேவை அடிப்படையில் கற்பித்துவரும் ஆசிரியருக்கு வருகின்ற மாதம் முதல் தனது சொந்த நிதியில் மாதாந்த கொடுப்பனவினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like