மைதானத்திலிருந்து சிசுவின் சடலத்தை கவ்விச் சென்ற நாய் : இலங்கையில் சம்பவம்

நுவரெலியா, சினிசிட்டா மைதானத்திலிருந்து இன்று காலை 11 மணியளவில் சிசுவொன்றின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாயொன்று சிசுவின் சடலத்தை கவ்விக் கொண்டு செல்லும் போது அதனை முச்சக்கரவண்டி சாரதியொருவர் அவதானித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பம் தொடர்பில் அவர் நுவரெலியா பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

எனினும், சிசு யாருடையது என்பது தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பிரேத பரிசோதனைகளுக்கா சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

You might also like