கொழும்பில் இராணுவத்தினரின் அட்டகாசம்! பொலிஸ் அதிகாரிக்கு நேர்த்த பரிதாபம்

பாடல் பாட வேண்டாம் என அறிவுறுத்தியால் ஆத்திரமடைந்தவர்கள் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதுடன் அவரின் காதையும் கடித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவர், 10 இராணுவ அதிகாரிகள், 8 கடற்படை அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி இரவு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து, பிரபு பாதுகாப்பின் பிரதான பொலிஸ் பரிசோதகர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குலுக்குள்ளான அதிகாரி நாரஹென்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த தினத்தன்று இரவு 7 மணியளிவில் தனது பொலிஸ் சோதனைச்சாவடி அருகே சிலர் பாடல் பாடி கொண்டிருப்பதாகவும் அதனை நிறுத்துமாறும் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டது.

அங்கு இராணுவ உயர் அதிகாரிகள் சிலரும் கடற்படை அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரி ஒருவரும் குடிபோதையில் பாடல் பாடியுள்ளார். அதனை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரி கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அன்றைய தினம் குறித்த பொலிஸ் அதிகாரியின் அறைக்குள் சென்ற நபர், பிரபு பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளதுடன் அவரது காதையும் கடித்துவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like