தேர்தலுக்கு பெண்களை தேடி அலையும் அரசியல் கட்சிகள்! களத்தில் இறங்கியது கூட்டமைப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் பிரதான அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களைத் தேடி அலையத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பித்து விட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 335 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன.

25 வீதம் பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற விதிமுறை முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பொருத்தமான பெண் வேட்பாளர்களை தேடத் தொடங்கியுள்ளன.

மேலும், வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு பெண்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாவிடின், பெண்கள் அமைப்புகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளில் தலைமை தாங்கும் பெண்களில் இருந்து தெரிவு செய்வோம் எனவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வேட்பாளர்கள் தமது பணத்தைச் செலவிட விரும்பினால் செலவிடலாம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் குறைவாக உள்ள நிலையில், பெண் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like