வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் புதிய அரசியலமைப்பு உருவாக்க குழுவின் ஏற்ப்பாட்டில் இன்று (16.10.2017) காலை 10.00மணியளவில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு இடம்பெற்றது.

சட்டத்தரணி விரிவுரையாளர் திருமதி.கோசலை மதன் அவர்களின் தலமையில் இடம்பெற்ற இவ் செயலமர்வில் ஆசிரியர்கள் , அக்கினி சிறகுகள் அமைப்பின் உறுப்பினர்கள், அஸ்திரம் அமைப்பின் உறுப்பினர்கள், ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள், சேக்கிழார் மன்றத்தின் உறுப்பினர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள், சமுக ஆர்வளர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அரசியலமைப்பு தொடர்பான பல்வேறு வினாக்கள் எழுப்பப்பட்டதுடன் அதற்கு சட்டத்தரணி தீர்க்கமான பதில்களை வழங்கினார்.

You might also like