வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியரை துரத்திப் பிடித்த பொலிஸார்

வவுனியாவில் பிரபல பாடசாலை ஆசிரியரொருவர் மது போதையில் அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தி வந்துள்ளதுடன் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில் பொலிஸார் அவரை துரத்திச் சென்று பிடித்துள்ளதுடன், குறித்த சம்பம் நேற்று நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியரை, பாடசாலையிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சோதனை செய்வதற்காக பொலிஸார் வழிமறித்துள்ளனர்.

இதன்போது, அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ள நிலையில் பொலிஸார் அவரை துரத்திச் சென்று பிடித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அவர் மதுபோதையில் காணப்பட்டுள்ளதுடன், சாரதி அனுமதிப்பத்திரம் அவரிடம் இருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று மாலை வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

இதன்போது பதில் நீதவான் குறித்த ஆசிரியரை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும், இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like