வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் உபாலி கிரிபத் துடுவ அவர்களுக்கு கௌரவிப்பு

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (16.10.2017) காலை 10.30மணியளவில் வவுனியா மாவட்ட சுதந்திரக் கட்சியில் அமைப்பாளர் உபாலி கிரிபத் துடுவ அவர்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையினரின் ஏற்ப்பாட்டில் வரவேற்பு நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

வவுனியா மத்திய பேரூந்து நிலையில் மாலை அணிவித்து கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் நடைபவணியாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வவுனியா சாலையில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் விவசாய அமைச்சர் துமிந்த சில்வா அவர்களின் செயலாளர் அஜித் களுவராட்சி , வன்னி பிராந்திய இ.போ.ச ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

கடந்த 12.10.2017 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இலங்கை போக்குவரத்து சபை வட பிராந்திய பிரதான பிராந்திய முகாமையாளர் உபாலி கிரிபத்துடுவ அவர்களை வவுனியா மாவட்ட சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like