வவுனியாவில் கொடூர கொலை..! 12 நாட்களின் பின் உடல் நல்லடக்கம்

வவுனியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்பவரின் உடல் 12 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி வீட்டில் நித்திரையில் இருந்தபோது கோடரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நபர் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

குடும்பஸ்தரின் சடலம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களின் இறுதி அஞ்சலியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

குறித்த நபரின் தாயார் வெளிநாட்டில் இருந்து வருவதற்காக காத்திருந்த நிலையில், அவர் வரமுடியாத நிலையில் தற்போது நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like