வவுனியா பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வர்த்தக கண்காட்சி – 2017

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக தீபாவளியினை முன்னிட்டு இன்று (16.10.2017) காலை 9.00 மணி தொடக்கம் 5.00மணி வரை சமுர்த்தி வர்த்தக கண்காட்சி இடம்பெற்றது.

இவ் வர்த்தக கண்காட்சியினை வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா மற்றும் சமுர்த்தி மாவட்ட பணிப்பாளர் திருமதி ச. பத்மரஞ்சன் ஆரம்பித்து வைத்தனர்

வர்த்தக கண்காட்சியில் மரக்கறி , பழவகை , பலசரக்கு பொருட்கள், ஆடை , அணிகலன்கள், சிற்றுண்டிவகை , புதிய பழச்சாறு என பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.

You might also like