கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முத்தமிழ் விழா கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று(16) இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நடனங்கள், இசை, நாடகம், பேச்சு உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாகாண மற்றும் தேசிய ரீதியில் பாடசாலை மட்டங்களில் வெற்றிப்பெற்ற பல கலை நிகழ்வுகளும் இந்த முத்தமிழ் விழாவில் அரங்கேற்றப்பட்டன.

இதன்போது கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், வைத்தியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like