வவுனியாவில் சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் செயற்பாடு

வவுனியா நகரில் ஒட்டப்பட்ட சர்ச்சைக்குரிய சுவரொட்டிகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் ஒட்டப்பட்டுள்ளதாக வவுனியா வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பையடுத்து இன்று வவுனியா வர்த்தகர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும்,

வவுனியா மாவட்டத்தில் அனைத்து இன, மத மக்களிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் வவுனியா நகர்ப்பகுதிகள் எங்கும் சில விஷமிகளால் சிவசேனா என்ற அமைப்பின் பெயரை பயன்படுத்தி இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்செயலானது மக்களிடையே இன முரண்பாடுகளையே தோற்றுவிக்கும். இதனை வவுனியா வர்த்தகர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like