எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதியும், பிரதமரும் வவுனியா விஜயம்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெறும் நடமாடும் சேவையில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி நடமாடும் சேவையை இந்த ஆண்டு மூன்று இடங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முதலாவது ஜனாதிபதி நடமாடும் சேவை பொலன்னறுவையிலும், இரண்டாவது நடமாடும் சேவை காலியிலும் நடைபெற்ற நிலையில் மூன்றாவதும், இவ்வாண்டின் இறுதியுமான நடமாடும் சேவை எதிர்வரும் 21ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து

அத்துடன், வன்னிப் பகுதியில் வசிக்கும் 5,000 மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் ஆயிரம் பேருக்கு வாழ்வாதார உதவியும், இளைஞர்களின் தொழில் முயற்சிக்காக ஆயிரம் பேருக்கான உதவித் திட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும், அடையாள அட்டை, கடவுச் சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், காணி உறுதிப்பத்திரம், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like