வவுனியாவில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே நேற்று (23.01.2017) தொடக்கம் சாகும் தமக்கு நீதி வேண்டி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வேண்டுகோளுக்கினங்க வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் பணிப்பின் கீழ் இன்று (24.01.2017) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இவ் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன் , அடைக்கலநாதன் வடமாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா, மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like