வவுனியா ஒமந்தை பொலிஸார் அதிரடி நடவடிக்கை : 5 மணித்தியாலத்தினுள் 20நபர்கள் கைது

ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே காணப்படும் உணவகத்திற்கு முன்பாக கடந்த 13.10.2017 அன்று மதியம் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சின்ன புதுக்குளம் பகுதியை சேர்ந்த 15 நபர்களையும் நொச்சிமோட்டையை சேர்ந்த 5 நபர்களையும் ஒமந்தை பொலிஸார் நேற்றையதினம் (15.10.2017) கைது செய்து இன்று (16.10.2017) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த 20 நபர்களையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ் இரு கிராமத்திற்குமிடையில் ஜாதியின் காரணமாக தான் சண்டைகள் அதிகரித்து காணப்படுவதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள் :- ​வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டையில் வாள்வெட்டுச் சம்பவம் : மூவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் கடைக்குள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம் : பொலிஸார் விசாரணை

வவுனியாவில் காதலை தெரிவித்த நபரின் வாகனத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் முயற்சி

 

 

 

You might also like