பாணிற்குள் துருப்பிடித்த ஆணி! வவுனியாவில் சம்பவம்

வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் விற்பனை செய்த பாணிற்குள் துருப்பிடித்த ஆணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வியாபார நிலையத்தில் பாணினை வாங்கி வீட்டில் சென்று அதனை வெட்டிய போதே துருப்பிடித்த நிலையில் ஆணி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது.

 

இதனையடுத்து குறித்த பாணை வாங்கிய நபர் வியாபார நிலையத்தில் அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

குறித்த பாண் வவுனியா, சூசைப்பிள்ளையார் குளம் பகுதியில் உள்ள பேக்கரியில் பெறப்பட்டதாக வியாபார நிலைய உரிமையாளர் கூறியுள்ளார்.

இது குறித்து பேக்கரி உரிமையாளருக்கு தெரியப்படுத்திய போது, உரிமையாளர் அது தொடர்பில் பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் குறித்த வியாபார நிலையத்தில் பெறப்பட்ட பாண் ஒன்றில் இருந்து நீளமான பச்சை நூல் கண்டு பிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like