வவுனியாவில் இரு நாட்களில் மூன்று மரக்கடத்தல்கள் முறியடிப்பு

கடந்த இரு நாட்களில் வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட மூன்று மரக்கடத்தல்கள் வனவள அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

புதூர் காட்டுப்பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகளை கடத்த தயாரான நிலையில் நின்ற பாரவூர்தி ஒன்று வன வள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், பாரவூர்தியின் சாரதி தப்பி ஓடியுள்மையினால் பாரவூர்தியை மீட்ட வனவள அதிகாரிகள் அதனை தமது காட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை, வேலங்குளம் பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாலை மர தீராந்திகள் உட்பட பெறுமதியான மரங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை இன்று அதிகாலை வேலங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மேலும் பாலை மரக்குற்றிகளும், தீராந்திகள் மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

கைது செய்யப்பட்ட இருவரையும்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நெடுங்கேணி வட்டார வன வள அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியானது என தெரிவித்தனர்.

You might also like