கிளிநொச்சியில் மது போதையில் கத்தி வெட்டு: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கடந்த மாதம் மதுபோதையில் இருகுழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்தி வெட்டாக மாறிய நிலையில், நான்குபேர் கத்தி வெட்டிற்கு இலக்காகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சிப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த இருவரும் தொடர்ந்து நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

You might also like