வவுனியாவில் தீபாவளி துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி.!

வவுனியா கோவில்குளம் றொக்கட் விளையாட்டுக்கழகம் தனது 41ஆவது ஆண்டின் நிறைவை முன்னிட்டும், தீபாவளி தினத்தை முன்னிட்டும் நடத்தும் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி  கோவில்குளம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

கோவில்குளம் ரொக்கெட் விளையாட்டுக்ககத்தின் தலைவர் வி.ஜோயல் நிரோஷன் தலைமையில் நடைபெற்ற இறுதி போட்டியில், லெவன் ஸ்டார் விளையாட்டு கழகம் எதிர் ஐக்கிய நட்சத்திர விளையாட்டுக் கழகங்கள் மோதியிருந்தன. இதில் லெவன் ஸ்டார் அணியினர் வெற்றி பெற்றனர்.

இந்த போட்டியின் இறுதி நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவருமான க.சந்திரகுலசிங்கத்தால் சிறு ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான க.சந்திரகுலசிங்கம், ஓய்வு பெற்ற அதிபர் ஐ.வையாபுரிநாதன், கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தின் அதிபர் சு.வரதராஜா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ் இறுதி போட்டியில் லெவன் ஸ்டார் விளையாட்டு கழகம் எதிர் ஐக்கிய நட்சத்திர  விளையாட்டுக் கழகங்கள் மோதின இதில் லெவன் ஸ்டார்  அணியினர் வெற்றி பெற்றனர்.

இப்போட்டியின் இறுதி நிகழ்வில் புலமை பரிசில்  பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் சிறு ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

 

You might also like