வவுனியாவில் குடும்பம் ஒன்றுக்கு 25 நல்லிண மாங்கன்றுகள் வீதம் வழங்கி வைப்பு

ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஊடாக கூமாங்குளத்தைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்கு மாங்கன்றுகள் வழங்கும் செயற்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் ஊடாக 300 குடும்பங்களுக்கு ரி.ஜே.சி நல்லிண மாங்கன்றுகள் வழங்கும் செயற்திட்டத்தில் 25 மாங்கன்றுகளை நாட்டக் கூடிய வகையில் தமது நிலங்களை தயார்ப்படுத்தியுள்ள 70 குடும்பங்களுக்கு 25 மாங்கன்றுகள் வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கிராமிய செயற்திட்ட இணைப்பாளார் நா.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா இளைஞர் அமைப்பாளர் சந்திரகுமார், கூமாங்குளம் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்ற செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி, கூமாங்குளம் இளம் விவசாய கழக தலைவர் கோ.ரகுவரன், பயனாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You might also like