கிளிநொச்சி – மாகாதேவா சைவச்சிறுவர் மேற்பார்வையாளருக்கு பிணை!

கிளிநொச்சி – மாகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராஜா 75 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீதிமன்றில் முன்னிலையாகி கையொப்பம் இடுமாறும் சந்தேகநபருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி – மாகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் சிறுவர்கள் ஐவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்து குறித்த இல்லத்தின் மேற்பார்வையாளர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like