வவுனியாவில் மைத்திரிக்காக எவ்வளவு செலவில் மலசலகூடம் மற்றும் பாதை புனரமைப்பு என தெரியுமா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையை முன்னிட்டு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த பாடசாலையின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக குறித்த நிதி செலவிடப்பட்டுள்ளது.
வர்ணம் பூசுதல், மைதானம் புனரமைத்தல், வீதி அமைத்தல், மின் இணைப்புகள் அற்ற பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கல், மலசல கூடம் அமைத்தல், புனரமைத்தல், மின்குழிழ்கள் பொருத்தல், பூச்சாடிகள் அமைத்தல், குளிரூட்டி பொருத்தல், கெமராக்கள் பொருத்தல் போன்ற பணிகளுக்காக கடந்த 5 தினங்களுக்குள் 3 மில்லியன் ரூபாவினை மத்திய அரசாங்கம் செலவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.